பூரண மதுவிலக்கு என்ற பேச்சுக்கு எப்போதுமே இடமில்லை! வாஷிங்மெஷின் இலவசம்!

Report Print Basu in இந்தியா
பூரண மதுவிலக்கு என்ற பேச்சுக்கு எப்போதுமே இடமில்லை!  வாஷிங்மெஷின் இலவசம்!
235Shares
235Shares
lankasrimarket.com

இந்தியாவின் மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களிலும், தற்போது சட்டமன்ற தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கேரளா மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதே, நாட்டு மக்களின் நலன் கருதி, அரசாங்கத்தின் ஆயிரம் கோடி வருமானத்தை பற்றி வருந்தாமல் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலோ, தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தலில் வெற்றிப்பெற அனைத்து கட்சிகளும் மது விலக்கை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளனர்.

எனினும், இந்த வாக்குறுதி எத்தகைய நம்பகத் தன்மை கொண்டது என தேர்தல் முடிவிற்கு பின் தமிழக மக்களுக்கு தெரிய வரும்.

இந்நிலையில், மதுவிற்கு பெயர் போன சென்னையை அடுத்துள்ள புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் ரெங்கசாமி கருத்து வெளியிட்டுள்ளார்.

என்.ஆர்.கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர். புதுச்சேரியில் பூரண மது விலக்கு என்ற பேச்சுக்கு எப்போதுமே இடமில்லை என கூறியுள்ளார்.

மேலும், என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments