போதையில் கார் ஓட்டி வந்து தொழிலாளியை கொன்ற பெண்: சென்னையில் பரபரப்பு

Report Print Basu in இந்தியா

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய பெண்ணின் செயலால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரமணி அருகே அதிகாலை 4.40 மணியளவில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த முனுசாமியின்(48) மீது குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று வந்த பெண் ஒருவர் மோதியுள்ளார்.

இதில், 15 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்ட இந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிசென்ற 3 பெண்களை அப்பகுதி மக்கள்மடக்கி பிடித்தபோது, அவர்கள் போதையில் இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மூன்று பெண்களையும் மீட்டுச் சென்றதாகவும், இறந்தவரின் உடல் ஒரு மணிநேரமாக அதே இடத்தில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த காரை ஓட்டிய பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா, பிரபல தொழிலதிபரின் மகள் எனவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த வாகனம் தற்போது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ளதாகவும், அந்த மூன்று பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துணை ஆணையர் அலுவலகத்தில் வத்து விசாரித்ததாகவும் கிண்டிகாவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments