ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

Report Print Murali Murali in இந்தியா
ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?
709Shares

குடி போதையில் வாகனத்தை செலுத்தி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான ஐஸ்வர்யா, பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சேத்துபட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா குடிபோதையில் கார் ஓட்டியதில் கடந்த 2ஆம் திகதி ராஜீவ் காந்தி சாலையில் வைத்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது, திருவான்மியூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐஸ்வர்யா தற்போது புழல் மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிணை கோரி ஐஸ்வர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, பிணை கோரி கடந்த வாரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், "குறித்த விபத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, தான் குடி போதையில் காரை செலுத்தவில்லை, எனினும், இந்த விடயத்தை ஊடகங்கள் பெரிதாக்கியதால் போதையில் காரை செலுத்தியதாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவையில்லாமல் தான் இந்த வழக்கில் தான் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா, தனக்கு பிணை வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

குறித்த மனு கடந்த 7ஆம் திகதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஐஸ்வர்யா குடிபோதையில் இருந்தாரா என்பதை உறுதி செய்யும் வகையில், சந்தேக நபரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

குறித்த ஆய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, பிணை மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், குறித்த பிணை மனு இன்றைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த பிணை மனு மீதான விசாரணை மீண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments