மணப்பெண்ணுக்காக காத்திருக்கும் 9 லட்சம் மாப்பிள்ளைகள்: அதிசய கிராமம்

Report Print Santhan in இந்தியா

குஜராத் மாநிலத்தில் மணப்பெண்ணுக்காக 9 லட்சம் மாப்பிள்ளைகள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் போர்பந்தல் நகரின் சவுரஷ்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பட்டீல்(34). இவருக்கு போர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தன் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் தன் மகளை திருமணம் செய்ய வேண்டுமென்றால் சவுராஷ்திரா கிராமத்தை விட்டு போர்பந்தலில் வந்து குடியேறும் படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் பட்டீலோ சொந்த கிராமத்தை விட்டு வரமுடியாது என கூறியதால், திருமணம் தடைபட்டது.

இதேபோன்று லட்சக்கணக்கான மாப்பிள்ளைகள் மணப்பெண்ணுக்காக காத்திருக்கின்றனர் என ரமேஷ் பட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு என்றாவது ஒருநாள் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்று உறுதியாக கூறியுள்ளார். போர் பந்தலில் 2 திருமணமாகாத பெண்களுக்கு, 7 திருமணமாகாத ஆண்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் பல்வேறு சமூகத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் படித்துள்ளதால், படிக்காத ஆண்களை திருமணம் செய்ய முன்வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 25 முதல் 34 வயதுக்கு உட்பட்டு சுமார் 11.83 லட்ச திருமணமாகாத ஆண்கள் உள்ளனர்

மேலும்,34 வயதுக்கு மேற்பட்டு திருமணமாகாத ஆண்கள் 9.16 லட்சம் பேரும், பெண்கள் 2.67 லட்சமும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments