ஜெயலலிதாவுக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து உணவு?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கான உணவுப்பொருள் சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெஸ்டெக் (Nestec) நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட திரவ உணவுப் பொருட்கள் 7-ம் திகதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இந்த பார்சல் பத்திரமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுமார் 18 கிலோ எடை கொண்ட அந்த பெட்டியில் Peptamen Smartflex என்கிற உணவுப் பொருள் சுமார் 36 டின் பாட்டில்களில் வந்துள்ளது.

திரவ உணவான Peptamen Smartflex உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படக்கூடியது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாக வெளியான தகவலில், அன்றாட உணவுகளை உட்கொள்ள முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு முக்கியமாக செயற்கை சுவாசம் மேற்கொள்ளும் ஒருவருக்கு டியூப் மூலம் வழங்கப்படக்கூடிய பானமாகும். மிக விரைவில் செரிமானமாகும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments