புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் செய்த மனதை உருக்கும் காரியம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் டெல்லி மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் ராகுல் நர்வேகர்- ஆர்.ஜெ பல்லவி.

பல்லவி கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளி, ஆனால் எந்தவொரு காரணத்திற்காகவும் அவர் துவண்டுபோகவில்லை, மாறாக அதை எதிர்த்து தன் வாழ்க்கையை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பக்க பலமாக அவரின் கணவர் ராகுல் இருந்து வருகிறார்.

இந்த கணவனும் மனைவியும் வாழ்க்கையை எப்போதும் பாசிடிவ்வாகவே பார்க்க வேண்டும், எந்த பிரச்சனை வந்தாலும் தன்னம்பிக்கையோடு தைரியமாக எதிர்த்து சமாளிக்க வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்து வருகின்றனர்.

பல்லவியின் தன்னம்பிக்கை குணத்தை பார்த்து மருத்துவமனையில் ஊழியர்கள் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

தற்போது பல்லவி மருத்துவமனையின் ICU வார்டில் இருந்து கொண்டே ICU - LOVE STORIES என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தை அவரின் பிறந்தநாளன்று அவரின் கணவர் ராகுல் ICU வார்டிலேயே வெளிட்டிருக்கிறார்.

இது பற்றி ராகுல் கூறுகையில், பல்லவி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம்.

அதன் படி கேக் வெட்டி, அவர் எழுதிய புத்தகத்தை ICU வார்டிலேயே வைத்து வெளிட்டுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

புற்றுநோயுடன் போராடும் பல்லவி விரைவில் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments