ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய சாட்சி அவசர கடிதம்: விடுதலை கிடைக்குமா?

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய சாட்சியான ரமேஷ் தலால் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ராஜீவ் கொலை தொடர்பான சிபிஐ விசாரணையில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. முக்கியமான சிலவற்றை விசாரிக்கவில்லை.

இந்நிலையில் சி.பி.ஐ கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்ய காத்திருக்கிறது. இதில், சி.பி.ஐ பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு கோரி உள்ளது.

இந்த வழக்கில் சரியான முடிவு எட்டும் வரை, இவ்வழக்கின் விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதத்தில் நீங்கள் இந்த விடயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments