போயஸ் கார்டனில் ரெய்டு? இரண்டு அறைகளுக்கு சீல்? பதற்றத்தில் சசிகலா

Report Print Santhan in இந்தியா

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவில் வருமானவரித்துறையினர் சோதனையின் முன்னோட்டமாக, அங்குள்ள இரண்டு அறைகளுக்கு அதிரடியாக சீல் வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அண்மை காலமாகவே வருமானவரித்துறையினர் தமிழகத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மற்றும் பலருடைய வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அடங்குவார், இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்காக 90 பேர்கள் கொண்ட குழுவை வருமான வரித்துறையினர் களத்தில் இறக்கியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி துணை இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி அன்று காலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதும், தற்போது சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் அதிரடியாக வருமான வரித்துறையினர் உள்ளே சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு சென்ற அவர்கள் குறிப்பிட்ட 2 அறைகளைப் பார்வையிட்டதாகவும், அதன்பின்னர் திடீரென்று யாரும் திறக்க கூடாது என்பதற்காக சீல் வைத்துவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சீல் வைக்கப்பட்ட அந்த அறையில் அதிமுக கட்சி தொடர்பான ஆவணங்கள் அல்லது அமைச்சர்கள் தொடர்பான பைல்கள் இருக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இந்த அறைகள் சீல் வைக்கப்பட்டதன் காரணமே, ரெய்டுக்கு முன்னோட்டம் தான் என்கிறார்களாம் வருமானவரித்துறையினர். இதனால் சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments