காதலியை கொடூரமாக கொன்றது ஏன்? காதலன் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் காதலி வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்ததால் அவரை கொலை செய்ததாக காதலன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரில் படித்து வருபவர் மோனிகா. இவர் சில தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஏரியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரித்து வந்த நிலையில் கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என மோனிகாவின் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், மோனிகாவை கொலை செய்ததாக பொலிசாரிடம் சரணடைந்துள்ள கோகுல்நாத் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மோனிகாவும், கோகுல்நாத்தும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கோகுல்நாத் அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காதலித்து விட்டு, வீட்டில் பார்க்கும் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய மோனிக்கா சம்மதித்ததால் ஆத்திரத்தில் மோனிகாவை கல்லூரி விடுதியில் இருந்து வெளியே அழைத்து வந்து கொன்றதாக தெரிவித்துள்ளான்.

பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments