அம்மா திட்டுனாங்க: தூக்கில் தொங்கிய 12 வயது சிறுவன்

Report Print Kabilan in இந்தியா
318Shares
318Shares
lankasrimarket.com

டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீதியை சுத்தம் செய்த மாணவனை தாய் கண்டித்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன், இவருடைய மகன் நிஷாந்த் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிஷாந்த் அப்பகுதியில் தனது நண்பர்களை சேர்த்துக் கொண்டு குப்பைகளை சுத்தம் செய்து வந்தான்.

இதை விரும்பாத நிஷாந்தின் தாய் அவனை கண்டித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நிஷாந்த் வழக்கம் போல குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்திருக்கிறான்.

அப்போது அவனது தாய் ‘ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் குப்பைகளை சுத்தம் செய்வதால் உனக்கும் தொற்றிக்கொள்ளும்’ என கூறி குளித்துவிட்டு வரச்சொல்லிருக்கிறார்.

குளியலறைக்கு சென்ற நிஷாந்த் வெகுநேரமாகியும் வெளியே வரததால் அவனது தந்தை சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது நிஷாந்த் தூக்கில் தொங்கி இறந்திருந்தான்.

இதுகுறித்து தகவல் கிடைத்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிஷாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்