போனஸாக கார் கொடுத்த வைரவியாபாரி: இந்த வருடம் அவர்கள் மனைவிகளுக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் வைர வியபாரி ஒருவர் தன்னிடம் பணிபுரியும் 7,000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட்டை போனஸாக வழங்கியுள்ளார்

குஜராத்தின் சூரத்தில் உள்ளவர் சாவ்ஜி டோல்கியா. வைரவியாபாரியான இவர் தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பொருட்களை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 51 கோடி செலவில் தனது ஊழியர்களுக்கு 400 வீடுகளையும், 1260 கார்களையும் வழங்கினார். அது பெரிதும் பேசப்பட்டது.

இதையடுத்து இந்தாண்டிற்கான தீபாவளி போனஸாக இவர் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மட்டை போனஸாக வழங்கியுள்ளார்.

அதாவது, இவரிடம் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது, ஹெல்மெட் அணிந்திருந்ததால், உயிர் தப்பினார். ஆனால், அவரது மனைவி ஹெல்மெட் அணியாததால் அந்த விபத்தில் பலியானார்.

இதன் காரணமாக இந்த வருடம் தீபாவளி போனஸாக தன்னிடம் பணிபுரியும் 7,000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட்டை வழங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers