பணத்திற்காக தந்தைக்கு மகன் செய்த கொடூர செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாமக்கல் மாவட்டத்தி பணத்திற்காக தனது தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விவசாயியான செல்வராஜ்-பாப்பாத்தி தம்பதியினருக்கு ராஜ்குமார் என்ற மகன் உள்ளார்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் செல்வராஜ் தனது தோட்டத்தில் வீடு கட்டி வந்தார். இந்த விவாகாரத்தில் தந்தை மகனுக்கு இடையே பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

செல்வராஜின் வங்கிகணக்கில் இருந்து 55 ஆயிரம் ரூபாயை தருமாறு தாயும், மகனும் கேட்டுள்ளனர்.

35 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்த நிலையில், 20 ஆயிரம் ரூபாயை தர செல்வராஜ் மறுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றியதில் தந்தை செல்வராஜை, தாயுடன் சேர்ந்து கம்பத்தில் கட்டிவைத்து கம்பியால் அடித்துள்ளார்‌ ராஜ்குமார்.

அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட விவசாயி செல்வராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர் ராஜ்குமாரையும், பாப்பத்தியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்