பட்டப்பகலில் நடந்த துயரம்: தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்! பதைபதைக்கும் வீடியோ

Report Print Harishan in இந்தியா
1370Shares
1370Shares
lankasrimarket.com

தமிழகத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சாலை ஒன்றில் மேனகா என்ற பெயருடைய நடுத்தர வயது பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த பெண் தனியே வருவதை கவனித்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் செயின் கையோடு வராததால் அந்த பெண் நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்படும் மனதை பதற வைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கெமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்