பொது வெளியில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய இளம் நடிகையால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டியிருந்தார்.

இதையடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

இதே போல மேலும் சிலர் மீதும் ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீ ரெட்டி வேண்டுமென்றே இப்படி செய்வதாக கூறி தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் இன்று ஐதராபாத் நடிகர் சங்க அலுவலகம் எதிரே ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஸ்ரீரெட்டியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள்.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers