வைகோ மீது மது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

வாகன பிரசாரத்தின் போது வைகோ மீது மது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில் உள்ள சாலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வாகனத்தில் நின்றபடி வைகோ பேசிக்கொண்டிருந்த போது, பின்னால் நின்ற வாகனம் மீது பாட்டில் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.

உடனே வைகோ தனது பேச்சை நிறுத்திவிட்டு பார்த்த போது, அருகிலிருக்கும் மாடியிலிருந்து மர்ம நபர் ஒருவர் வைகோ மீது மதுபாட்டிலை வீசியதும், அது குறி தவறி விழுந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மாடியிலிருந்தவர்கள் மீது மதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு சென்ற பொலிசார் தொண்டர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்தவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்