காவிரி விவகாரம்: இறுதி அறிக்கையில் மீண்டும் சர்ச்சை

Report Print Gokulan Gokulan in இந்தியா
54Shares
54Shares
ibctamil.com

காவிரி விவகாரம் தொடர்பான திருத்தப்பட்ட இறுதி அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் வாரியம் அமைக்க உத்தரவிட்டிருந்த நிலையில் ஆணையம் அமைப்பதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாதத்தின் போது நீதிபதிகள் காவிரி அமைப்பு என்பதை மேலாண்மை வாரியம் என பெயர் மாற்ற வேண்டும், நதிநீர் பங்கீட்டில் வாரியத்தின் முடிவே இறுதியானது என்றும் இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட கூடாது என்றும், புதிய அணைகளை மாநில அரசு கட்ட வேண்டும் என்றால் வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என அறிக்கையில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரைத்தனர்.

மேலும், இந்த மாற்றங்களை செய்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த முன்று மாற்றங்களையும் செய்து வரைவு அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. ஆனால் அதில் வாரியம் என்ற பெயருக்கு பதிலாக ஆணையம் என உள்ளது இது தமிழக மக்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வரும் 22 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பெயர் மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு வாரியத்தை விட ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்