மூத்த திரைப்பட நடிகர் காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்

Report Print Raju Raju in இந்தியா

மூத்த திரைப்பட நடிகர் ஹேமு அதிகரி உடல்நலக்குறைவால் தனது 81-வது வயதில் காலமானார்.

இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற ஹேமு பல முன்னணி நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஹேமுவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நுரையீரல் சம்மந்தமான பிரச்சனை இருந்து வந்தது.

ஹேமு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஹேமுவுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers