கொலை வழக்கில் 11 தமிழர்கள் அதிரடி கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளியே படுத்திருந்த 11 தமிழர்களை தமிழக பொலிசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி கோயிலுக்கு வெளியே நேற்றிரவு ஏராளமான பக்தர்கள் படுத்திருந்தனர். அப்போது சாதாரண உடையில் அங்கு சென்ற பொலிசார் ஒருவர் பின் ஒருவராக கைகளை கயிற்றில் கட்டி காரில் ஏற்றினர்.

அப்போது ஒரே காரில் அவர்களை கொண்டு செல்ல கூடாது என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

11 பேரையும் ஒரே காரில் அடைத்து ஏற்றிச்செல்லக்கூடாது என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களை தமிழகம் கொண்டு செல்ல தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் உதவி செய்வதாக கூறினர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 11 பேரும் ஆந்திர அரசுப் பேருந்து உதவியுடன் தமிழக எல்லைக்கு கொண்டு வரப்பட்டனர். கொலை வழக்கில் 11 பேரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் 11 தமிழர்களையும் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers