சிறுத்தையை காப்பாற்ற ஒன்று கூடிய குரங்குகள்: கமெராவில் சிக்கிய நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை காப்பாற்றுவதற்கு குரங்குகள் ஒன்று கூடியது தொடர்பான வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் Sikar பகுதியின் கோவில் அருகே உள்ள 27 அடி கொண்ட கிணற்றில் சிறுத்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.

இதைக் கண்ட சில குரங்குகள் அந்த கிணற்றையே பார்த்தபடி இருந்துள்ளன, அதைத் தொடர்ந்து சில குரங்குகள் அந்த கிணற்றின் சுவரில் ஏறி நின்று, அப்பகுதியிருக்கும் கிராம மக்கள் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக அங்கு சென்றுள்ளனர்.

அப்போது உள்ளே சிறுத்தை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் உடனடியாக இது குறித்த தகவல் விலங்கு மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த அவர்கள் ஏணி உதவியுடன் சிறுத்தையை பத்திரமாக மீட்டு வெளியில் அனுப்பியுள்ளனர்.

வெளியேறிய சிறுத்தையால் அக்கிராம மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை இல்லை எனவும் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

குரங்குகள் மூலம் சிறுத்தை காப்பாற்றப்பட்டுள்ளதால், அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers