பெண் துஷ்பிரயோகம்: இலங்கை தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா
128Shares
128Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது பெண்ணை பலாத்காரம் செய்த இலங்கை தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டத்தின் குளித்தலையில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை தமிழரான ஜம்புலிங்கம் என்கிற ராஜ்குமார் தங்கியிருந்தார்.

கடந்த 2016 நவம்பரில் அருகில் இருந்த வீட்டில் தங்கியிருந்த 38 வயதான பெண்ணிடம் நைசாக பேசி தன் வீட்டுக்கு அழைத்து வந்த ராஜ்குமார் அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு கரூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்