7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பெண்: அடுத்து நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் கர்ப்பிணியாக இருந்த அங்கன்வாடி சமையலர் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக உள்ளவர் தனலட்சுமி.

7 மாத கர்ப்பிணியான தனலட்சுமி சத்துணவு அமைப்பாளர் உமா அரிசி, முட்டை போன்றவற்றை வெளியே கொண்டு சென்று விற்பதாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வியாழனன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கர்ப்பிணி என்றும் பாராமல் தனலட்சுமியை உமா வயிற்றில் எட்டி உதைத்தாக சொல்லப்படுகிறது.

இதில் சுருண்டு விழுந்த தனலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் அடிப்படையில் ராசிபுரம் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்