ஒரே புகைப்படத்தால் பிரபலமான மாணவியை கிண்டல் செய்த நெட்டின்சன்கள்: உங்கள் உதவி வேண்டாம் என பதில்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மீன் விற்ற கல்லூரி மாணவி தன்னைப் பற்றி கிண்டல் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஹனன் என்ற மாணவி கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீன் விற்று விற்பனை செய்து தன்னுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் குறீத்து பிரபல நாளிதல் ஒன்றில் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரை சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால், இந்த தகவல் பொய், இந்த கதையே ஒரு வதந்தி என்று எல்லாம் கிண்டல் செய்து வந்தனர்.

அதுமட்டுமின்றி இந்த மாணவிக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், ஒரே புகைப்படம் மூலம் இந்த பெண்ணிற்கு இப்படி அதிர்ஷ்டமா என்று பலரும் வியப்படைந்தனர்.

இந்நிலையில் ஹனன் படிக்கும் கல்லூரியின் முதல்வரும், அவரது நண்பர்களும், அது எல்லாம் உண்மையானது என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், கிண்டல் செய்யும் நெட்டிசன்களை வன்மையாக கண்டித்தார்.

இதையடுத்து கேலி கிண்டலுக்குள்ளான மாணவி ஹனன், எனக்கு உங்களின் எந்த உதவியும் வேண்டாம். என்னால் இயன்ற வேலையை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்