எப்பவும் அவ கூட தான் இருப்பீயோ? கணவரின் மர்ம உறுப்பை அறுத்து துடி துடிக்க வைத்த முதல் மனைவி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இரண்டாவது மனைவியுடனே கணவர் தங்கியிருந்ததால், ஆத்திரமடைந்த முதல் மனைவி அவரின் மர்ம உறுப்பை அறுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின், முசாபர் நகரில் உள்ள மிம்லானா பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் முதல் மனைவியின் சம்மதத்தின்பேரில் கணவர் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இரண்டாவது மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அந்த கணவர், இரண்டாவது மனைவி வீட்டிலேயே இருந்துள்ளார்.

கணவர் தன்னை பார்க்க வராததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி அங்கு சென்று கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் நறுக்கினார்.

இதனால் அலறி துடித்த அவரை அருகில் இருந்த அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முதல் மனைவி மீது பாதிக்கப்பட்ட கணவரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்