முதலையின் தலையை தொட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாப நிலை! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in இந்தியா

முதலையின் தலையை இளைஞர் தொட முயன்ற போது, முதலை அவரின் கையை கடித்ததால், அவர் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தன் நண்பருடன் இருந்த போது, அருகில் இருந்த ஏரியில் முதலை ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.

இதையடுத்து குறித்த இளைஞர் முதலையின் தலையை மெதுவாக தொட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக முதலை அவரின் கையை கடித்து உள்ளே இழுக்க பார்த்தது.

வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்.....

இதைக் கண்ட உடன் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைய, அந்த இளைஞர் முதலையிடம் சிக்காமல் தப்பியுள்ளார். இருப்பினும் முதலை கடித்ததால், அவரது இடது கையில் இரத்தம் வழிந்தது.

அதன் பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவில் எங்கு நடந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை, அதுமட்டுமின்றி காயம் ஏற்பட்ட இளைஞரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்தும் எந்த செய்தியும் வரவில்லை.

ஆனால் இந்த சம்பவத்தின் காட்சியை அங்கிருந்த நண்பர் ஒருவர் வீடியோவாக எடுத்ததால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers