தமிழ் மொழியால் இந்தியாவுக்கு பெருமை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Report Print Kabilan in இந்தியா

உலக மொழிகளில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்பது இந்தியாவுக்கு பெருமை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் உரையாற்றினார். அந்த உரையில், ’உலக மொழிகளில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்பது இந்தியாவின் பெருமை’ என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பாரத ரத்னா விருது வென்ற டாக்டர்.எம்.விஸ்வேசரய்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், கட்டிடக்கலையை போற்றும் விதமாகவும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் திகதி பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவே, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். கேரள வெள்ள பாதிப்பின்போது, மக்களுக்கு உதவிட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், முப்படை பிரிவினர் கைகோர்த்து செயல்பட்டதற்கு பாராட்டுக்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...