“நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, “புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இச்செய்தி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து உடனடியாக தன் பதிவை நீக்கிய அவர், ‘நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் ஆரோக்கியமான உடல்நிலைய பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.
உயிரோடு இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட எம்எல்ஏ-க்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.