வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு முதுகை படிக்காட்டாக காட்டிய நபருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! அது என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது முதுகை படிக்கட்டாக காட்டிய நபருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 324 பேர் பரிதாபமாக பலியாகினர். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பெண்ணை மீட்க மீனவர்களின் உதவியை அவர்கள் நாடினர்.

அவர்களுக்கு தேசிய ரப்பர் படகை தேசிய மீட்பு படையினர் வழங்கினர். மீட்பு படகில் சென்ற கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர், அந்த பெண் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரால் தானாக படகில் ஏற முடியாது என்பதையும் உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக மாற்றினார். அவர் மீது ஏறி, அப்பெண் படகில் அமர்ந்து கொண்டார்.

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால், அவருக்கு பாராட்டுகள் மற்றும் உதவிகள் குவிந்து வருகின்றன.

இதையடுத்து கோழிக்கூட்டைச் சேர்ந்த மஹேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் மாரஸோ காரை வாங்கிய, அதுவும் பரிசாகப் பெற்ற முதல் நபர் ஜெய்ஷால்தான்.

கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி. ராமச்சந்திரன், கார் சாவியை அவரிடத்தில் வழங்கினார். கார் பரிசு பெற்ற ஜெய்ஷால், எந்த விருதையும் பரிசையும் எதிர்பார்த்து மீட்புப் பணியில் ஈடுபடவில்லை. நான் என் கடமையை மட்டுமே செய்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers