திருமணமான 5 மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஹைதராபாத்தில் திருமணமான 5 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சந்தீப் என்ற இளைஞரும், ரூபிணி (25) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு ரூபிணியின் தந்தை முரளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பை மீறி சந்தீப்பும், ரூபிணியும் திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த ரூபிணியின் திருமண வாழ்வில் சந்தீப்பின் பெற்றோர்களான சத்யநாராயணா மற்றும் லலிதா மூலம் பிரச்சனை வந்தது.

காதல் திருமணம் செய்ததால் வரதட்சணை எதுவும் ரூபிணி தராத நிலையில், அவரின் தந்தை முரளியின் சொத்தில் பங்கு கேட்டனர் சந்தீப்பின் பெற்றோர்.

இதையடுத்து ரூபிணியை சந்தீப் மற்றும் அவர் பெற்றோர் கொடுமைப்படுத்த தொடங்கினார்கள்.

இது குறித்து ரூபிணி, தனது தந்தை முரளியிடம் கூற அவர் வந்து சந்தீப் மற்றும் அவர் பெற்றோர்களிடம் சமாதானம் பேசினார்.

சிறித்து காலம் கழித்து சொத்தை பிரித்துதருவதாக கூறினார். ஆனாலும் அவர்களின் கொடுமை ரூபிணிக்கு தொடர்ந்தது.

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து முரளி பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில் சந்தீப் மற்றும் அவர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers