அவர் பொய்யர்! வைரமுத்து விளக்கத்துக்கு சின்மயி பதிலடி

Report Print Raju Raju in இந்தியா

சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து டுவீட் செய்த நிலையில் அவர் பொய்யர் என சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பிரபல பாடகி சின்மயி டுவிட்டரில் தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு வைரமுத்து தற்போது மறைமுகமாக டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

அந்த பதிவில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது.

உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வைரமுத்துவின் டுவீட்டுக்கு பதில் டுவீட் செய்துள்ள சின்மயி, அவரை பொய்யர் என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்