முகேஷ் அம்பானியின் ஒரே மகளுக்கு திருமணம்: மணமகன் யார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தனது நீண்ட நாள் காதலரான ஆனந்த் பிரமலை வருகிற டிசம்பா் 12ம் திகதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியின் மகள் ஈஷா அம்பானியும், தொழிலதிபா் ஆனந்த் பிரமலும் நீண்ட கால நண்பா்களாக வலம் வந்தனா். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை பறிமாறிக்கொண்டனா். இவா்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து இவா்களது நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 21ம் திகதி தொடங்கி 23ம் திகதி வரை 3 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் திங்கள் கிழமை மாலை மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகா் கோவிலுக்கு வந்து வழிபட்டனா். அப்போது ஈஷா அம்பானி, ஆனந்த் பிரமல்லின் திருமண அழைப்பிதழை கோவிலில் வைத்து வழிபாடு மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து செவ்வாய்க் கிழமை இரவு ஈஷா, ஆன்ந்தின் திருமண தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி இவா்களது திருமணம் வருகிற டிசம்பா் 12ம் திகதி மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்