கண்முன்னே உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 4 குட்டிகள்: கதறி அழுத தாய் நாய்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானாவில் 4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் நகரில் கடந்த சனிக்கிழமையன்று 4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டன.

இப்படி ஒரு கொடூரமான விடயத்தை செய்தது யார் என தெரியவில்லை. ஆனால் பெற்ற தாயின் கண்முன்னே இந்த 4 குட்டிகளும் உயிரோடு எரிந்து மடிந்தன.

அதை பார்த்து தாய் நாய் என்ன செய்வதென்று தெரியாமல் இங்குமங்கும் ஓடியது, கொளுத்து விட்டு எரியும் தீயை கண்டு நடுங்கி பரிதவித்தது.

கடைசியில் நாய்க்குட்டிகள் கருகி போன நிலைக்கு வரும்போது, வேற வழியே தெரியாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டது.

இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக பொலிஸ் புகார் தந்தனர்.

விரைந்து வந்த அவர்கள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

நாய்க்குட்டிகள் எரிவது மற்றும் தாய் நாய் கதறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers