சின்மயி விவகாரத்துக்கு பின்னர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து: என்ன பேசினார்?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.

பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் சின்மயி நீதிமன்றத்தை நாடட்டும் என வைரமுத்து கூறினார்.

சின்மயி விவகாரத்துக்கு பின்னர் டுவிட்டரில் மட்டும் கருத்துக்கள் கூறிவந்த வைரமுத்து பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வைரமுத்து உரையாற்றினார்.

அவர் பேசுகையில், கஜா புயல், இயற்கை நம்மீது தொடுத்த போர். கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டிருந்தால் அதிக நிவாரண நிதி கிடைத்திருக்கும், மேகதாது பிரச்னையை சர்வதேச பிரச்னையாக கருத வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers