கணவரை பிரிந்து 7 வருடமாக வேறு நபருடன் வாழ்க்கை.. வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ! பரபரப்பு பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் சினிமா நடிகர்களுக்கு கேரவன் வேன்களை வாடகைக்குவிடும் தொழிலதிபர் ஒருவர், பெண் அதிகாரியால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் ஊசிமலையை சேர்ந்தவர் கதிரவன்.இவர், சென்னையில் சினிமா திரைப்பட நடிகர் - நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் ஓய்வெடுக்கப் பயன்படுத்தும், 20க்கும் மேற்பட்ட கேரவன் வேன்களையும், சொகுசு கார்களையும் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

பர்கூர் ஊசிமலையில், கதிரவனுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கவுரிகாமாட்சி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

கவுரி காமாட்சி, கேரளாவில் திருவனந்தபுரத்தில், ஒட்டப்பாறையில் உள்ள காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான எஸ்.யு.டி.அகாடமி ஆப் மெடிக்கல் சைன்ஸ் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். 7 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இதனிடையே கவுரி காமாட்சி தனக்கு நெருக்கமான காவல் அதிகாரிகளின் துணையோடு கதிரவனுக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. கதிரவனின் சொத்துக்களை அபகரிக்க கவுரி காமாட்சி முயற்சி செய்வதால் கதிரவன் தலைமறைவானதாக தகவல் வெளியானது

கதிரவனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பர்கூர் ஊசிமலையைச் சேர்ந்த இரு மலைவாழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் கௌரி காமாட்சியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தலைமறைவாக உள்ள கதிரவன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் தன்னைப் பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கதிரவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகி கௌரி காமாட்சியிடம் விளக்கம் பெற முயன்ற போது, அவரது தரப்பில் யாரும் பேச முன்வரவில்லை.

இது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அங்குள்ள மலைவாழ்மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்