நான் தான் அவருக்கு முதல் பொண்டாட்டி... நடந்தது என்னன்னா... கண்ணீர் விடும் கர்ப்பிணி பெண்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி, காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் முன்பு கர்ப்பிணி பெண் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் காவல் குற்றப்பிரிவில் சீனிவாசன் என்பவர் உதவி ஆய்வாளராக உள்ளார்.

இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பாலக்கோடு காவலர் குடியிருப்பில் உள்ள சீனிவாசனின் வீட்டின் முன்பு, பாய் தலையணையுடன் வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்யா என்ற கர்ப்பிணி பெண், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் கூறுகையில், நான் தான் சீனிவாசனின் முதல் மனைவி, கடந்த 2008ஆம் ஆண்டு அவர் என்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

தற்போது கர்ப்பமாக உள்ள தன்னிடம் அவர் பேச மறுப்பதாக சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்ப்பிணி பெண் காவல் உதவி ஆய்வாளர் வீட்டு முன்னர் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers