17 மணிநேர போராட்டம் வீண்..... வலியால் துடிக்கும் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா

நீலகிரி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் பழங்குடியின கர்ப்பிணிப் பெண் தீபாவுக்கு 48 மணி நேரத்திற்கு பிறகுதான் ஸ்கேன் எடுத்து சிகிச்சை தொடங்க இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வெளிச்சத்துடனும், சப்ததத்துடன் மின்னல் தாக்கியதில் இருளர் பழங்குடியினர் 11 பேர் காயமடைந்தனர்.

வனப்பகுதி என்பதாலும் தொடர் மழையின் காரணமாகவும் எந்த வாகனமும் செல்ல முடியாமல் இருந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்ணான தீபாவுக்கு, மின்னல்தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

எந்த முதலுதவியும் இல்லாமல் 17 மணி நேரம் காத்திருந்து, மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

மின்னல் தாக்கியதில் அவருடைய இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.

ஆனால், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என மருத்துவமனையில் தெரிவித்தனர்.

தீபா வயிற்றில் உள்ள கரு பாதிப்படைந்துள்ளதா அல்லது நல்ல நிலைமையில் உள்ளதா உறவினர் கேட்டதற்கு, பெண் மருத்துவர்கள் இல்லை ஊட்டி குன்னூரில் ஸ்கேன் இல்லை, திங்கட்கிழமைக்குப் பிறகே சிகிச்சை மேற்கொள்வோம் என மருத்துவர்கள் தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்