மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை பாஜக மூத்த தலைவர் சுப்பரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பள்ளப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியுள்ளார்.
இதற்கு பாஜக, அதிமுக-வை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக-நிர்வாகி தரப்பில் கமல் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமலின் கருத்து குறித்து பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பரமணிய சுவாமி, கமல்ஹாசன் ஒரு மகா முட்டாள். அவரை சீக்கிரம் பைத்தியகார மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என பேட்டியளித்துள்ளார்.