பிரதமராக இரண்டாவது முறை பதவி ஏற்பு: மோடியின் மனைவி யசோதா வருத்தம்

Report Print Arbin Arbin in இந்தியா

இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அவரது மனைவி யசோதாவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் மனைவி என்பதால் யசோதாபென்னுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும்,

இதுவரை நரேந்திர மோடி கலந்துகொண்ட எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவரது மனைவியை பங்கெடுத்துக் கொள்ள அழைப்பு விடுத்ததில்லை.

தற்போது இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார்.

இது தொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், குஜராத்தின் சூரத் மாநகராட்சியால் இன்று மாலை பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன். அதனால் பதவியேற்பு விழாவை நேரலையில் என்னால் பார்க்க முடியாது என யசோதாபென் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று யசோதாவின் தம்பி அசோக் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்