பாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா! வெளிச்சத்திற்கு வந்தது உண்மை

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் செலவின் மொத்த தொகை வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. இதனையடுத்து, மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ஊடக ஆய்வாளர்களுக்கான மையம், 2019 நாடாளுமன்ற தேர்தல் செலவு குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. கள ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அதில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 60,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. உலகிலேயே அதிக பணம் விளையாடிய தேர்தலாக, 2019 நாடாளுமன்ற தேர்தல் இருக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, ஒரு வாக்காளருக்கு 700 ரூபாயும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 100 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 12,000 கோடி முதல் 15,000 கோடி வரை வாக்காளர்களுக்கு நேரடியாக பணமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 20,000 கோடி முதல் 25,000 கோடி வரை விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

அதில், ஆளும் பாஜக 45 சதவீத செலவு, அதாவது மொத்தம் 27,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 20 சதவீதம், 12,000 கோடி செலவு செய்துள்ளதாக வெளியிட்டுள்ளது.

மேலும், 2024 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் செலவு 1 டிரில்லியன கோடி ஆகும் என ஊடக ஆய்வாளர்களுக்கான மையத்தின் தலைவரான என் பாஸ்கர ராவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers