பல்கலைக்கழக தேர்வில் பட்டையை கிளப்பிய செக்யூரிட்டி: பிரமிக்க வைக்கும் கதை

Report Print Basu in இந்தியா

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி வேலை செய்து வந்த நபர், அதே பல்கலைக் கழகத்தில் பயில நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார்.

34 வயதான ராம்ஜல் என்ற நபரே இவ்வாறு தேர்ச்சி பெற்றுள்ளார். தான் முதல் முயற்சியிலே தேர்விலே தேர்ச்சி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பஜேரா கிராமத்தை சேர்ந்தவர் 34 ராம்ஜல் மீனா. இவர் தனது கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு 12ம் வகுப்பை முடித்த ராம்ஜல் மீனா, தனது குடும்ப வறுமை காரணமாக அவர் தனது படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். ராம்ஜல் மீனாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை எழ., பணி நேரம் முடிந்த பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயாராகியுள்ளார் ராம்ஜல் மீனா. அப்போது அங்கு ஏற்கெனவே பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவருக்கு உதவி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர் பல்கலைக்கழக்கத்தின் நுழைவு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் பல்கலைக் கழகத்தில் இவர் தற்போது பிஏ ரஷியன் பட்டப்படிப்பு படிக்கவுள்ளார்.

இது குறித்து ராம்ஜக் மீனா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே நாளில் பிரபலமானதாக நான் உணர்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்