பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: நெஞ்சை உருகவைக்கும் 4 பக்க கடிதம்

Report Print Vijay Amburore in இந்தியா

காதலிக்கு வேறு நபருடன் நிச்சயிக்கப்பட்டதால் மனவேதனையடைந்த இளைஞர் பேஸ்புக் நேரலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சேகர்வார் என்கிற இளைஞர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இளம்பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட இளைஞர் கடந்த சனிக்கிழமையன்று உள்ளூரில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்கு பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

நேரலையில் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக இளைஞரின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த 4 பக்க கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடித்ததில், என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல. தயவுசெய்து யார் மீதும் நடவடிக்கைக்கு எடுக்காதீர்கள்.

என்னுடைய காதலி வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொள்ளப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. இந்த மன அழுத்தம் என்னை அதிகம் பாதித்துவிட்டது. என்னுடைய வேலையை கூட இழந்துவிட்டேன்.

நான் இறந்ததும் என்னுடைய உடல் உறுப்புகளை மறக்காமல் தானம் செய்துவிடுங்கள். இந்த முடிவிற்காக என்னுடைய அம்மா - அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers