தவறான விஷயத்திற்கு அடிமையாகி காதலனுடன் உல்லாசம்! வாழ்க்கையே போச்சு... இளம் பெண் கண்ணீர் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கஞ்சா போன்ற மது போதைக்கு அடிமையாகியதால், இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டேன் என்று கதறி அழுது வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை வன்னியதேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா லிப்ஷா(42). இவர் நுங்கம்பாக்கத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 12-ஆம் திகதி காலை 7.30 மணிக்கு தனது தோழி ரோகிணியுடன் பாண்டி பஜார் ஜி.என்.செட்டி சாலையில் நடைபயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது இவர்கள், சன் பிளாசா அருகே நடந்து வரும் போது, பின்னால் பைக்கில் இளம் பெண் ஒருவருடன் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் பிரசன்னா லிப்ஷாவின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இது குறித்து அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கிருந்த சிசிடிவி கமெராக்காளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் பைக் ஓட்டிய நபர் ஹெல்மட் அணிந்திருந்ததால், அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை, அதுமட்டுமின்றி பின்னால் இருந்த பெண்ணும் சரியாக தெரியவில்லை, வண்டியின் எண்ணை வைத்து விசாரித்த போது, அது காணமல் போன பைக் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, உடனடியாக தனிக்குழு அமைக்கப்பட்ட, பொலிசாரிடம் வாட்ஸ் அப் குழுவிற்கு பைக், அந்த பெண்ணின் புகைப்படம் போன்றவைகளை அனுப்பியுள்ளனர்,

அதன் பின் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே உள்ள வீட்டில் குறித்த பைக் நிற்பதை ரோந்து சென்ற பொலிசார் கண்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு உள்ளே சென்ற போது, பெண் மற்றும் இளைஞர் ஒருவர் இருந்துள்ளனர், அவர்கள் இருவரும் பொலிசாரை கண்டவுடன் தப்பிக்க முயற்சிக்க, பொலிசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுவாதி(20) எனவும், இளைஞரின் பெயர் ராஜூ(29) என்பதும் தெரியவந்துள்ளது.

அப்போது சுவாதி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சுவாதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். ஊடகத்துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசையில் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் சேர்ந்து, கல்லூரியில் இருக்கும் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்த போது, இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண் நண்பர்களின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் நல்ல வசதியான ஆண் நண்பர் என்பதால், அவருடன் நெருக்கமாக பழகி, கிளப்பிற்கு செல்வது, மது அருந்துவது , கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜாலியாக இருந்துள்ளார். காலப்போக்கில் போதைக்கு அடிமையானதால் வார இறுதி நாட்களில் கல்லூரி விடுதியில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி ஆண் நண்பருடன் சென்று போதை பொருள் பயன்படுத்தி வந்துள்ளார்.

சுவாதிக்கு போதை பழக்கம் அதிகமானதால் பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், இவருடைய ஆண் நண்பர் விட்டு விலகி சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுவாதி டாட்டூ உடலில் வரைய இன்ஸ்டாகிராம் மூலம் டாட்டூ கலைஞர்களை தேடி உள்ளார்.

அப்போது தான் ராஜூவின் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் ஒரு வாரத்தில் ராஜூ உடன் நெருக்கம் ஏற்பட்டது. அதன்படி ராஜூ, சுவாதிக்கு உடலில் அவர் விரும்பிய டாட்டூவை குத்தியுள்ளார். ராஜூவுக்கும் கஞ்சா பழக்கம் இருந்ததால் சுவாதிக்கு வசதியாக அமைந்தது.

இதனால் இருவரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளனர். கல்லூரி விடுதியில் தங்கி இருந்ததால் அடிக்கடி வெளியே வர முடியாத நிலை ஏற்படும் என்று, சுவாதி வீட்டை விட்டு வெளியே வந்து, அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வந்துள்ளார்.

இதற்காக வீட்டில் படிப்பிற்காக பணம் தேவைப்படுகிறது என்று கூறி, 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். கல்லூரி விடுதியில் இருந்து சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் லிவ்வீங் டூ கெதர் போல் வசித்து வந்தனர்.

ராஜூவுக்கு போதிய வருமானம் இல்லாததால் இருவரும் கஞ்சா அடிக்க பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

அப்போது தான் வழிப்பறியில் ஈடுபட இருவரும் முடிவு செய்து, இந்த சம்பவத்தில் இறங்கியதாக கூறியுள்ளார்.

மேலும் சுவாதி வசதியான கல்லூரி மாணவர்களின் தவறான பழக்கத்தால் சுவாதி கஞ்சாவுக்கு அடிமையானதாகவும், தனது வாழ்க்கையை தொலைத்துவிட்டதாகவும் கூறி பொலிசாரிடம் கதறி அழுதுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்