விடுதி அறையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி: அதிர்ச்சியடைந்த தோழிகள்

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்த லிங்கராஜு என்பவரின் மகள் காவ்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை வயிற்றுவலி இருப்பதாக கூறி கல்லூரியிலிருந்து காவ்யா விடுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அறையில் யாரும் இல்லாததால் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர் கல்லுரி முடிந்து அறைக்கு திரும்பிய சகமாணவிகள் காவ்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவயதில் இருந்தே தெலுங்கு மொழியில் படித்து வளர்ந்த காவ்யா கல்லூரியில் ஆங்கிலம் பயில முடியாமல் பின் தங்கியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்