பள்ளி மாணவனுடன் காதல்! திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கணவர் திருநங்கையாக மாறியதால், மனைவி பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பீகாரில் பிறந்த பெண் ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

ஆனால் கணவர் திடீரென்று திருநங்கையாக மாறி, திருவிழா மற்றும் ராம லீலை உள்ளிட்ட கூத்துக்களில் நடனமாடி வருகிறார்.

கணவர் திருநங்கையாக மாறியதால், மிகுந்த வேதனையில் இருந்த அவருக்கு அருகில் இருக்கும் 12-ஆம் வகுப்பு மாணவனின் நட்பு கிடைத்துள்ளது.

இந்த நட்பு காலப்போக்கில் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை கண்டுபிடித்த ஊர்மக்கள் பள்ளிச்சிறுவனை சரமாரியாக தாக்கினர். அதுமட்டுமின்றி அந்த சிறுவனை கொலை செய்யவும் துணிந்தனர்.

ஆனால், அதன் பின் தங்கள் முடிவை மாற்றி இந்த பெண்ணுக்கும், அந்த மாணவருக்கும் செருப்பால் மாலை அணிவித்து ஊரார் பார்க்கும்படி ஊர்வலம் செல்லவைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஊரை விட்டும் தள்ளிவைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருக்கும் மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வைரலானதால், இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதித்தோடு, இந்த முடிவினை எடுத்த பஞ்சாயத்து தலைவர்களை தேடிவருகின்றனர்.

ஆனால் அவர்கள் முன் ஜாமீன் வாங்குவதற்காக, தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் தொடர் விசாரணையில், இந்தக் கள்ளக்காதல் உறவில் அந்த பள்ளி மாணவரும், இந்த திருமணமான பெண்ணும் வேறு வேறு ஜாதியினர் என்பதாலேயே இருவரும் இப்படி நடத்தப்பட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்