பள்ளி மாணவியை சீரழித்து வேறொரு பெண்ணுடன் திருமணம்! DNA சோதனையில் காத்திருந்த உண்மை: நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Santhan in இந்தியா
517Shares

தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய இளைஞன் டி.என்.ஏ பரிசோதனையில் சிக்கியதால், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் மூக்கையா. இவருக்கு மாரிமுத்து(29) என்ற மகன் உள்ளார்.

மெக்கானிக்கான மாரிமுத்து அதே பகுதியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த மாணவி கர்ப்பமானதால், இது குறித்து மாணவி மற்றும் அவரின் பெற்றோர் மாரிமுத்துவை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டுள்ளனர்.

அதற்கு மறுத்த மாரிமுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

இதையடுத்து மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மாணவிக்கு கடந்த 11.1.2016-ல் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அப்போது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குழந்தைக்கு டி.என்.எ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது மாரிமுத்து தான் தந்தை என்பது உறுதியானதால், இது தொடர்பான வழக்கு விசாரணையில், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மாரிமுத்திற்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்