ஆயுதங்கள்.. வெடிமருந்துகள் நிரம்பிய லொறியுடன் நுழைந்த தீவிரவாதிகள்: முறியடித்த இந்தியா

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் பஞ்சாப்-ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு சென்ற லொறியை பிடித்த அதிகாரிகள், மூன்று தீவிரவாதிகளை கைது செய்து ஆறு ஏ.கே .47 ரக துப்பாக்கிகளை மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Lakhanpur, பஞ்சாப்-ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அருகே ஜம்மு-காஷ்மீர் பொலிசார் காலை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஜம்மு-காஷ்மீர் பதிவு எண் கொண்ட லொறி ஒன்றை பொலிசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

ANI

அப்போது, லொறிக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், லொறியை கைப்பற்றி 3 பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த லொறி பஞ்சாப் பகுதியில் இருந்து காஷ்மீருக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வாகனம் சோதனை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்