பிரபல நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்... வீட்டில் சிக்கிய சட்டவிரோத பொருள்கள்

Report Print Basu in இந்தியா

பிரபல நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

வீட்டில் யானை தந்தம் வைத்திருந்து வழக்கு தொடர்பாக மேகன்லால் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு Thevara-வில் மேகன்லால் வீட்டில் நடந்த சோதனையின் போது யானை தந்தம் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக தந்தம் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, கோடநாடு மலைத்தொடரில் உள்ள Mekappala வன நிலையத்தில் மேகன்லால் மீது குற்ற வழக்கு பதியப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் தந்தம் வைத்திருக்கு மேகன்லாலுக்கு கேரள அரசு அனுமதி அளித்ததாக கூறப்பட்டது.

எனினும், அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறி AA Poulose என்ற நபர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மாத தொடக்கத்தில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு கேரள அரசு பதிலளித்தது. அதில், தந்தத்தை நடிகர் வைத்திருக்க அனுமதிக்க எந்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், பெரம்பவூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏன் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் விமர்சனங்களை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்நீதிமன்றத்தில் தலையீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி தந்தங்களை வைத்திருப்பது அல்லது மாற்றுவது தண்டனைக்குரியது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்