திருமண வீட்டில் விபரீதம்... ஆண்களை அடித்து துவைத்த பெண்கள்... பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமண கொண்டாட்டத்தின் போது மணமகன் வீட்டாரும், மணப்பெண் வீட்டாரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அஜய். இவருக்கும் இந்திரஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 29ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டாருக்கு இடையே எந்த முறையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்து சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளாலும், நாற்காலியாலும் அடித்து கொண்டனர். அதிலும் அங்கிருந்த சில பெண்கள் மிக மோசமாக சில ஆண்களை அடித்து துவைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

திருமணம் செய்து கொண்ட மணமகனும், மணப்பெண்ணும் ஒன்றாகவே உள்ள நிலையில் தங்களுக்குள் எந்தவொரு பிரச்னையும் இல்லை என கூறினார்கள்.

மேலும் இது குடும்ப பிரச்னை என்பதால் இது தொடர்பாக புகார் அளிக்க விரும்பாமல் எங்களுக்குள்ளேயே பேசி தீர்த்து கொள்கிறோம் எனவும் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்