கவுதம்கம்பீரை காணவில்லை - டெல்லியில் பரபரப்பு!

Report Print Abisha in இந்தியா

முன்னாள் இந்திய வீரரும் இன்னாள் டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம்கம்பீரை காணவில்லை என்ற வாசகம் ஒட்டபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் காற்று மாசு பிரச்னை நிலவி வரகின்றது. தீபாவளி பண்டிகையின்போது ஹரியான விவசாயிகள் ஏற்படுத்திய புகையினால் இத்தகைய சூழல் நிலவி வருவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்று மாசு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் கடந்த 15ஆம் திகதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 29நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்ப விடுக்கப்பட்டது. ஆனால். அதில் வெறும் 4பேர் மட்டும் கலந்து கொண்டனர்.

காற்று மாசு குறித்து கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சித்த கவுதம் கம்பீரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர், வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக கலந்து கொண்டார்.

மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்காமல், கவுதம் கம்பீர் பொழுதுபோக்கிற்கான விளையாட்டில் கவனம் செலுத்துவது கண்டனத்துக்குரியது என பலரும் விமர்சனம் செய்தனர். கவுதம் கம்பீருக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் பதிவிடப்பட்டன.

இந்நிலையில், டெல்லி ஐடிஓ பகுதியில் கவுதம் கம்பீரை காணவில்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில். இவரை காணவில்லை, யாரேனும் பாரத்தீர்களா என்று கேட்பதுபோல் எழுதப்பட்ட வாசகமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்