என்கவுண்டர் செய்யப்பட்ட 4பேரின் உடல்கள் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Report Print Abisha in இந்தியா

ஹைதரபாத்தில், என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

தெலுங்கான மாநிலம் ஹைதரபாத்தில், கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் லொறி ஓட்டுநர்களான முகமது ஆரிப், சென்னகேசவலுவும், கிளீனர்கள் சிவா, நவீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று அதிகாலையில், கொலை சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து நடித்துகாட்ட நான்குபேரும் அழைத்து செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால், அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், என்கவுண்டர் தொடர்பாக தெலுங்கான உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களையும் 9ஆம் திகதி மாலை6 மணி வரை பதப்படுத்தி வைக்க தெலுங்கானா அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பிரேத பரிசோதனை காட்சியை பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்