பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நால்வரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி வழக்கில் என் கவுண்ட்டர் செய்யப்பட்ட நான்கு கொடூரர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) கடந்த மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிசார் கடந்த 6ஆம் திகதி சம்பவம் நடந்த பகுதிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது நால்வரும் பொலிசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் அவர்களை பொலிசார் என் கவுண்ட்டரில் சுட்டு கொன்றனர்.

இதையடுத்து நால்வரது சடலமும் அரசு மருத்துவமனையில் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நால்வருக்கும் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது, இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நான்கு பேரின் உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்த போதிலும் உடலுக்குள் குண்டுகள் தங்கவில்லை.

முக்கிய குற்றவாளி முகமது உடலில் 4 குண்டு பாய்ந்துள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அதே போல ஷிவா மற்றும் சின்னகேசவலு உடலில் மூன்று குண்டுகளும், நவீன் உடலில் ஒரு குண்டும் பாய்ந்துள்ளது என கூறியுள்ளனர்.

இந்த துப்பாக்கி குண்டுகள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது, அது கிடைத்த பின்னரே அது யாருடைய துப்பாக்கிகளில் இருந்து வெளிவந்தது என்பது குறித்து தெரியவரும்.

பொலிசாரின் என் கவுண்ட்டருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் ஆணையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்